ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.