Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிக்கொண்ட தாயின் கள்ளக்காதலன்….. போலீஸ் அதிரடி….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன்(43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனது 13 வயது மகளுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இதனை அடுத்து பெண்ணின் மகளுக்கும் பாலகிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அந்த சிறுமி படிக்கும் பள்ளியில் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது சிறுமி நடந்தவற்றை தனது ஆசிரியர்களிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் சைல்டு லைன் 1098-ஐ தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். இதுகுறித்து அறிந்த பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில் பாலகிருஷ்ணன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. பின்னர் சிறுமியின் தந்தை அளித்த புகாரியின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Categories

Tech |