Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ‘கோமாளி’ பட இயக்குனர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘லவ் டுடே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோமாளி”. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் ”லவ் டுடே” என்ற படத்தை இயக்குகிறார்.

Love Today is a very close-to-heart film: Pradeep Ranganathan- Cinema  express

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ‘லவ் டுடே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 5 ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |