பிரபல சின்னத்திரை நடிகையான பாவ்னி ரெட்டி, தன் முதல் கணவரின் மரணத்துக்கு பின் மீடியா வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கினார். இதையடுத்து அவரை தேற்றி மீண்டுமாக சின்னத் திரைக்கு கொண்டுவந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதன்பின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் பாவ்னி ரெட்டிக்கு இப்போது ரசிகர்கள் அதிகரித்து இருக்கின்றனர். இவ்வாறு ரசிகர்களின் பாசமும், ஆதரவும் பாவ்னி ரெட்டியை மீண்டும் தன் இன்னிங்சை விட்ட இடத்திலிருந்து துவங்க வைத்துள்ளது.
இதனிடையில் பாவ்னி – அமீரின் காதல் கதைகளும் சமூகவலைத்தளங்களில் அதிக கவனம் ஈர்த்து வந்தது. பிக்பாஸ் வீட்டில் காதலை சொன்ன அமீருக்கு, பாவ்னி பிக்பாஸ்ஜோடிகள் சீசன் 2-வில் ஓகே சொன்னார். அதனை தொடர்ந்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்வில் பங்கேற்ற பாவ்னியிடம், கடந்தகால வாழ்க்கையில் இருந்து நீங்கள் எதை திரும்பபெற விரும்புகிறீர்கள் என கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது, என் கணவர் மீண்டும் வரவேண்டும். அத்துடன் அவர் தற்போது உயிருடன் இருக்கவேண்டும் என கூறினார். அத்துடன் இந்த பதிலால் அமீர் என்னுடைய 2வது கணவர் என்று தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நான் அமீருடன் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அமீர் என் வாழ்க்கையில் நடந்த மிகச் சிறந்த விஷயம் என கூறியுள்ளார். பாவ்னியின் இந்த பதில் பலரையும் குழப்பமடைய செய்திருக்கிறது. அதே நேரம் பாவ்னி தன் கணவர் மீது வைத்திருக்கும் காதலை பலரும் பாராட்டி வருகின்றனர்.