Categories
தேசிய செய்திகள்

நிர்பயா கொலை வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு கடிதம் அனுப்பிய சிறைத்துறை..!!

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ஆம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், திகார் சிறைத்துறை நிர்வாகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

திகார் சிறைத்துறை நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், தூக்கிலிடப்படும் தேதி நெருங்குவதால்,   கைதிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், முகேஷ் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் தங்களது பெற்றோரை ஏற்கனவே சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள குற்றவாளிகள் அக்ஷய் குமார் மற்றும் வினய் இருவரும் தங்களது குடும்பத்தினரை சந்திப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறைதுறை  நிர்வாகம் அறிவித்துள்ளது.

Image result for The tihar Prison Administration has written a letter to the four accused in the Nirbhaya murder case.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் நால்வருக்கு தூக்கு தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |