Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த மறுநாளில்….. மனைவி எடுத்த விபரீத முடிவு….. அந்தியூர் அருகே பரிதாப சம்பவம்….!!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் நாடார் காலணியில் கருப்புசாமி-அரசாயாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப்புசாமியை குடும்பத்தினர் அந்தியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அவரது மனைவி மன உளைச்சலில் அழுது கொண்டே இருந்துள்ளார். இறுதி சடங்குகாக கருப்பு சாமியின் உடல் நகலூர் கரடிக்கல் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் வேதனையில் இருந்த அரசாயாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உறவினர்கள் கருப்பு சாமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே அவரது மனைவியின் உடலையும் புதைத்து விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |