Categories
கிரிக்கெட் விளையாட்டு

தூக்கியெறியப்பட்ட…. ”சச்சின் , கபில்தேவ்”….. கொந்தளிக்கும் ரசிகர்கள் …!!

அகமதாபாத்தில் இருக்கும் மோதேரா கிரிக்கெட் மைதான திறப்பு விழாவுக்கு சச்சின் , கபில்தேவ்வை  அழைக்காதது ரசிகர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற பிப்ரவரி 24 , 25 என இரு நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 2015ஆம் ஆண்டு இந்தியா வந்த ஒபாமாவுக்கு பிறகு 5 ஆண்டு கழித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வர இருப்பதால் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதற்காக குஜராத் தயாராகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய மோதேரா கிரிக்கெட் மைதானத்தை ட்ரம்ப் திறந்து வைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இது உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சிறப்பை இது பெறுகின்றது. 63 ஏக்கர் பரப்பளவில் 700 கோடி செலவில் இந்த உருவாக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போன் மைதானத்தை விட மிகப் பெரிய மைதானமாக இந்த மைதானம் பார்க்கப்படுகின்றது.

sachin tendulkar vs kapil devக்கான பட முடிவுகள்

இந்நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கபில் தேவ் , சச்சின் டெண்டுல்கர் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு அளிக்கப்படவில்லை என்பது தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். இன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த தகவலில் சச்சின் , கபில்தேவ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்காக உலககோப்பையை பெற்றுக் கொடுத்த கேப்டன் வரிசையில் கபில் தேவ் இருக்கின்றார். கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார்.  இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக விளங்கும் இவர்கள் இருவருக்கும் அழைப்பு இல்லை என்பது நாம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறக்கும் இந்தியா இந்தியாவுக்காக கிரிக்கெட் துறையில் பல்வேறு சாதனைகளை பெற்றுக் கொடுத்த சச்சின் , கபில்தேவ்வை புறக்கணிக்க கூடாது என்று பல்வேறு ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். மேலும் சச்சின் , கபில்தேவ் போன்ற வீரர்களை வைத்து மைதானத்தை திறக்க வேண்டுஎன்ன்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |