Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்த சாமியார்… ஆசிரமத்தை இடித்ததாக போலீசில் புகார்…!!!!!!

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்து சாமியார் ஒருவர் அவரது ஆசிரமம் இடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு நேற்று சொகுசு காரில் நித்தியானந்தா போலவே சாமியார் ஒருவர் வந்துள்ளார். அவர் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் 25 பவுன் நகைகள் காணாமல் போனதாக பல்லடம் குற்ற பிரிவு காவல் நிலையத்தில் கடந்த வாரம் பாஸ்கர் ஆனந்த புகார் அளித்துள்ளார். இதற்கிடையே வெளியூர் சென்றிருந்த பாஸ்கரானந்தாவிற்கு ஆசிரம கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

Categories

Tech |