Categories
மாநில செய்திகள்

பதிவு கட்டணம்: இனி போலி கருத்தரிப்பு மையங்களுக்கு ஆப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு மையங்கள் செயல்படாமல் தடுக்க முடியும் என தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனவே கருத்தரிப்பு மையங்கள் மத்திய அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தை செலுத்தி வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |