உத்திரபிரதேசத்தை சேர்ந்த சஞ்சு குப்தா என்பவர் 2018-19, 2019-20 போன்ற நிதி ஆண்டுகளில் தன் கணவர் பெற்ற வருமானம் என்ன என்பதை அறிந்துகொள்ள தகவலறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்டிருக்கிறார். பரேலியிலுள்ள மத்திய பொது தகவல் மையமான CPIO-ம், வருமான வரித்துறை அதிகாரியும் முதலில் சஞ்சு குப்தா கேட்ட தகவலை கொடுக்க மறுத்துள்ளனர். ஏனென்றால் அவரது கணவருக்கு அதில் உடன்பாடு இல்லாததால் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதன்பின் சஞ்சு குப்தா FAA எனும் மேல்முறையீட்டு ஆணையத்திடம் தன் கணவரின் வருமான விபரங்களை கேட்டு மேல் முறையீடு செய்துள்ளார்.
இருப்பினும் மத்திய பொது தகவல் அலுவரின் உத்தரவு செல்லும் என மேல்முறையீட்டு ஆணையம் கூறியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மத்திய தகவல் மையத்தில் சஞ்சு குப்தா மேல்முறையீடு செய்ததை அடுத்து உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் ஆணைகளை ஆய்வுக்குட்படுத்திய பின் 15 நாட்களுக்குள் சஞ்சு குப்தா கணவரின் வருமான விபரங்களை வருமான வரித்துறையும் மத்திய பொது தகவல் அலுவலரும் வழங்க வேண்டும் என சென்ற செப்டம்பர் 19ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.