Categories
மாநில செய்திகள்

அக். 7,8 தேதிகளில்… 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் மதிய மேற்கு வங்கக்கடலை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் அக்டோபர் ஏழு எட்டாம் தேதிகளில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மேலும் நகரின் ஒரு சில பகுதிகளை லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 34 – 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்னும் அளவில் இருக்கக்கூடும். இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகத்தின் மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |