Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பள்ளிக்கு கொடுத்துவிட அருமையான சாதம்…. “புதினா சாதம்” …..

புதினா சாதம் 

 

தேவையான பொருட்கள் 

 

அரிசி                                                  2 கப்

புதினா                                               15 கொத்து

கேரட்                                                 3

பீன்ஸ்                                                8

கொத்தமல்லி இலை                 8 கொத்து

காலிஃப்ளவர்                                  1/2 பகுதி

எண்ணெய்                                       8  மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்                            8

வெங்காயம்                                    6

கிராம்பு                                              6

ஏலக்காய்                                         4

பூண்டு                                               15 பல்

தேங்காய்                                         1

பட்டை                                              3 துண்டு

உப்பு                                                   தேவைக்கேற்ப

 

செய்முறை 

 

முதலில் அரிசியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்.

தேங்காயைத் துருவி தண்ணீர் விட்டு அரைத்து 2 கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.

பீன்ஸ் மற்றும் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

காலிஃப்ளவரையும் சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லி இலை புதினா இலை பச்சை மிளகாய் பூண்டு இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றை போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள கேரட் பீன்ஸ் காலிஃப்ளவரை போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள புதினா கொத்தமல்லி கலவையை அதனுடன் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காய்பால் உப்பு சேர்த்து ஊற வைத்துள்ள அரிசியையும் அதனுடன் போட்டு குக்கரை மூடி 4 விசில் வரும் வரை காத்திருக்கவும்.

4 விசில் வந்தவுடன் சாதத்தை இறக்கி விடலாம். இப்போது சுவைமிக்க புதினா சாதம் தயாராகிவிட்டது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |