பிக் பாஸ் சீசன் 4 என்பது அக்டோபர் 4, 2020 முதல் 2021 ஜனவரி 17 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இருவர் ஆஜித் மற்றும் கேப்ரியல்லா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என கிசுகிசுக்கள் வந்தது. தொடர்ந்து வெளியே வந்த பிறகும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதற்கு தகுந்தார் போல் இவர்கள் இருவரும் தொடர்ந்து ஜோடியாக வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளனர். மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர் இந்த சூழலில் முதல் முறையாக ஆஜித்திடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து பேசி ஆஜித் நாங்கள் இருவரும் அப்படி பழகவில்லை எனவும் சொல்லப்போனால் நாங்கள் இருவரும் அண்ணன் தங்கை போல் தான் பழகி வருகிறோம் எனக் கூறியுள்ளார். இவருடைய பதிலில் இவர்கள் இருவருக்கும் இடையே இப்படிப்பட்ட ஒரு உறவான பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.