Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு படம் எடுத்து உன்னால வெற்றி பெற முடியல”… ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் பேரரசு…!!!!!!

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஆண்டி இந்தியன் என்னும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் படத்திற்கு விமர்சனம் சொன்ன ப்ளூ சட்டை மாறன் முதலில் படத்தை புகழ்ந்து பேசுவது போல பேசிவிட்டு அதன் பின் படத்தை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் அது பற்றி தற்போது இயக்குனர் பேரரசு கோபமாக அவரை தாக்கி பேசி வருகிறார்.

அதாவது ஆன்டி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் எடுக்க சொல்லுங்க ஒரு படம் எடுத்து உன்னால வெற்றி கொடுக்க முடியல நீ எல்லாம் அடுத்த படத்தை விமர்சிக்க தகுதி இல்லை. விமர்சனம் நாகரீகமாக இருக்க வேண்டும் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் படி இருக்கக் கூடாது. குறைகளை சுட்டிக்காட்டி சிந்திக்க வையுங்க. அந்த படத்தில் அந்த குறைகள் வராமல் செய்வதுதான் விமர்சனம் ஒரேடியாக விமர்சனம் செய்து சாகடிப்பது விமர்சனம் அல்ல அது கொலை என பேரரசு கூறியுள்ளார்.

Categories

Tech |