இந்த வருடம் நவராத்திரி விழா செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பூஜை சடங்குகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் முக்கியமான நிகழ்வாக துர்காபூஜை பண்டிகையானது நேற்று வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நவராத்திரிதியின் 9வது நாளான இன்று உத்தரபிரதேசத்தின் கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோயிலில் கன்யாபூஜை நடந்தது.
அப்போது பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் பூஜை நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பெண் குழந்தைகளின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி, பொட்டுவைத்து பூஜை செய்தார். அதனை தொடர்ந்து இன்று மாலை நடைபெறும் விஜயதசமி பூஜையில் யோகிஆதித்யநாத் கலந்துகொள்வோர் என தெரிவிக்கப்பட்டது.