Categories
சினிமா தமிழ் சினிமா

“திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டு களித்த படக்குழுவினர்”…. வெளியான வீடியோ….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை படக்குழுவினர் சத்தியம் திரையரங்கில் கண்டு களித்துள்ளார்கள்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. டிக்கெட் முன்பதிவு ஆரம்பமான சில மணி நேரத்தில் இரண்டு வாரங்களுக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்தது. மேலும் இத்திரைப்படம் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.

mani_ratnam_aish_twi_ss

இத்திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் உலக அளவில் 200 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் சென்னையில் இருக்கும் சத்தியம் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்துள்ளார்கள். மணிரத்தினம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |