Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு பூண்டு..!!

நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு..

நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை.

அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் கூடிய, உயிருக்கே உலை வைக்கும் பல நோய்களைப் பற்றி பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.

முதலில் பூண்டின்  நன்மைகளை பற் றி தெரிந்து கொள்ளுங்கள்..

இன்றைய முறையற்ற உணவு முறை, வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை இவற்றால் முன்பெல்லாம் 50 வயதைத் தாண்டி வந்த நோய் எல்லாம் இன்று 30 வயதிலேயே வர தொடங்கிவிட்டது. அதில் ஒன்றுதான் ரத்த அழுத்த பிரச்சினைகள்.

இப்படி ரத்த அழுத்த பிரச்சினைகள் தொடங்கி சரியாக கவனிக்காவிட்டால் இதய நோயில் கொண்டு போய் விடுகிறது. உடலில் முக்கிய உறுப்பு இதயம் பாதிக்கப்பட்டால் மீண்டும் அந்த நபர் இயல்பான வாழ்க்கை வாழ அதிக சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் பூண்டில் அல்லியலின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கொண்டுள்ளது. இது ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும் பூண்டு ரத்தம் உறைதலை தடுக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் ரத்தக் குழாய்களில் ரத்த அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது.

முக்கியமாக பூண்டு எத்தகைய இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்ப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வழக்கமாக பூண்டு சாப்பிடுவோருக்கு இதய தசைகள் வலுவாகும். மேலும் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிப்பது குறைந்து, இதய நோய் வருவதை முற்றிலும் தவிர்க்கப்படும்.

ஜீரண சக்தி அதிகரிக்கும்:

அடுத்து பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும். மற்றும் வயிற்று பிரச்சினைகள் இருந்தாலும் நீங்கிவிடும். ஜீரண சக்தி அதிகரிக்கும். மேலும் பூண்டில் உள்ள ஈதர்,  நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

தொண்டை சதையை நீக்கும். உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும் தன்மை உடையது.

இன்சுலின் சுரக்கும்:

அடுத்ததாக தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரத்தலை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது இந்த பூண்டு. அதேபோன்று தினமும் பூண்டை சாப்பிட்டு வந்தால் பல வகையான புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் முற்றிலும் குறைகிறது.

சீரான இரத்த ஓட்டம்:

பூண்டில் அல்லிசின் சைக்கோட் என்ற வேதிபொருள்கள் இருப்பதால்தான் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. அதுமட்டுமல்ல சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டு வலியை போக்கும். வாயுபிடிப்பு போக்கும், தினமும் 2 பூண்டுப் பற்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

எலும்புகள் வலுவிழப்பது:

நம் முறையற்ற உணவு முறைகளின் காரணமாக எலும்புகள் வலுவிழந்து தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் நிறைய ஏற்படுகின்றது. இதனால் இது போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களை சாப்பிட்டு வந்தாலே போதும். எலும்பு பலமாகும்.

மாதவிலக்கு கோளாறு:

பூண்டு மாதவிலக்கு கோளாறுகளையும் சரி செய்யகூடியது. சில பெண்களுக்கு அவர்களது அந்தரங்க உறுப்புகளில் கிருமித்தொற்று ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த எரிச்சல், அரிப்பு போன்ற தொந்தரவுகள் இருப்பதால் அவதிப்படுவார்கள். இதனால் இவர்கள் தினமும் 2 பூண்டுப் பற்களை சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே அனைத்து பிரச்சினைகளும் விலகும்.

வாய் துர்நாற்றம்:

பூண்டு சாப்பிடுவோருக்கு வாய் துர்நாற்றம், பற்களில் சொத்தை ஏற்படுவது, போன்ற பிரச்சனைகள் ஏதும் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் பூண்டை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்றவை நீங்கும்.

பூண்டு  இவ்வாறு சாப்பிட வேண்டும்..?

பூண்டினை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள் 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். இந்த நேரத்தில் அலிசின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் அதன் மருத்துவ நன்மையும் அதிகரிக்கும்.

இதன்பிறகு கெட்ட வாடையும் வராது, இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பூண்டு பற்களை பச்சையாக மென்று சாப்பிட்டால் அதனுடைய முழுமையான மருத்துவ நன்மைகளை நாம் பெற முடியும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட முடியும். இரவில் படுக்கும் முன்பும் சாப்பிடலாம். பொதுவாக நோய்கள் வந்த பிறகு சிரமப்படுவதை விட ஒரு ஐந்து நிமிடம் தினமும் ஒதுக்கி பூண்டை சாப்பிட்டு வந்தாலே நோய்கள் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும். நீங்களும் இனி செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

Categories

Tech |