சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு மூடிவிட்டது. பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் செல்ல அவமானப்படுகின்றனர்.
ஓசில ஏற வந்துடீங்களான்னு பேருந்தில் பெண்களை கேலி பன்றாங்க. ஓசிபயணம் என அமைச்சரே பேசுவதா?.. எனினும் அவரை முதலமைச்சரே கண்டிக்காதது ஏன்..? மேயரிடம் அமைச்சர் அதிகார தொனியில் பேசியது சரியானது கிடையாது. அமைச்சர்கள் செய்யும் அடாவடிகளை ஊக்கப்படுத்தும் விதமாகதான் ஸ்டாலின் செயல்பாடுகள் இருக்கிறது. இதனிடையில் ஒபிஎஸ்-க்கு தொண்டர்களின் ஆதரவு இல்லை. அவர்களது செயல்பாடு அறிக்கைகள், டுவிட்டரில் மட்டும்தான். பருவமழை வரவுள்ளது, மழை நீர்வடிகால் பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது வெட்ட வெளிச்சத்திற்கு வரும்” என்று அவர் கூறினார்.