Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவைமிக்க பாலக்காடு ஸ்பெஷல் அவியல்

பாலக்காடு அவியல்

தேவையான பொருட்கள் 

வாழைக்காய்                                         1

கேரட்                                                          2

முருங்கைக்காய்                                  1

பீன்ஸ்                                                        4

சேனைக்கிழங்கு                                  50 கிராம்

தேங்காய்                                                  அரைமூடி

பச்சை மிளகாய்                                     4

தயிர்                                                            1  கப்

சீரகம்                                                          1  டீஸ்பூன்

கடுகு                                                           1  டீஸ்பூன்

பூண்டு                                                        5 பல்

தேங்காய் எண்ணெய்                        இரண்டு டேபிள்ஸ்பூன்

உப்பு                                                           தேவையான அளவு

கொத்தமல்லி கறிவேப்பிலை      சிறிதளவு

செய்முறை

காய்கறிகள் அனைத்தையும் முதலில் சுத்தமாக கழுவி ஒரே அளவில் நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை போட்டு உப்பு சேர்த்துவேக வைக்கவும்.

அரை மூடி தேங்காயைத் துருவி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு கடுகுபொட்டியதும்  கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்துள்ள தேங்காவையும் அதனுடன் போட்டு கிண்டவும்.

பச்சை மனம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த காய்கறிகளையும் இதனுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி அதனுடன் தயிர் சேர்த்து கிளறிவிடவும்.

இப்போது சுவையான பாலக்காடு ஸ்பெஷல் அவியல் தயார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |