Categories
மாநில செய்திகள்

“ரூ10,000 கொடுங்க” ஆபாச படங்கள்…. போலீஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று ஆபாச படம் பார்ப்பதாக மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகையைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், அந்த கும்பல் போன் நம்பருக்கு அழைத்து உங்கள் போனில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது.

உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறோம். தப்பிக்க வேண்டும் என்றால் ரூ10,000 அனுப்ப வேண்டும் என கூறி மிரட்டுவதாக கூறியுள்ளனர். இதுபோல வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். அதை நம்பிய சந்திரகுமார் ‘போன் பே’ மூலம் மூன்று தவணைகளாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின்னர் அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |