Categories
தேசிய செய்திகள்

மகளை கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..! விசாரணையில் பகீர் தகவல்

டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் வசித்து வரும் ஷீத்தல் சவுதிரி (25 ) என்ற பெண் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  அவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை  திருமணம் செய்து கொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை காரில் கடத்தி சிக்காந்திராபாத் கொண்டு சென்றுள்ளனர்.  போகும் வழியிலேயே ஷீத்தலை அவரது பெற்றோரும், உறவினர்களும் சேர்ந்து கொன்று கால்வாயில் வீசியுள்ளனர்.

மனைவியின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாததால் அங்கித் டெல்லியில் நியூ அசோக் நகர் காவல் நிலையத்தில் மனைவியை யாரோ கடத்தி விட்டார்கள் என்ற புகாரை 17ஆம் தேதி கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து விசாரணையை தீவீர படுத்திய டெல்லி போலீசார் ஷீத்தல்  பெற்றோரிடம் விசாரணையை தொடங்கினார்கள். இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளுக்கு அவர்கள் கூறியது அதிர்ச்சியை கொடுத்தது.

இருவரும் அக்டோபர் 15-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு அவரவர் குடும்பங்களுடன் தொடர்ந்து இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 30-ஆம் தேதி ஷீத்தலை தனது பெற்றோரிடம்  திருமணத்தை பற்றி கூறியுள்ளார்.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் குடும்பத்தினர்  ஷீத்தலை  கழுத்தை நெறித்து கொன்றுள்ளனர். உடனடியாக உடலை  காரில் கொண்டு சென்று 80 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் கால்வாயில் வீசி உள்ளனர்.

அதுமட்டுமின்றி  காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் குடும்பத்தினர் முரண்பட்ட வகையில் கூறினார்கள்.  இறுதியில் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதை ஏற்க முடியாததால்  மகளை கொன்றதாக பெற்றோர்களும், உறவினர்களும் ஒத்துகொண்டனர்.

கால்வாயில் வீசப்பட்ட  பெண்ணின் உடலை மீட்டு அங்கித்திடம் ஒப்படைத்தனர் போலீசார். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஷீத்தல்  குடும்பத்தினர் 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Categories

Tech |