ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னைக் கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு காலத்தில் பாம்பு ஒரு மனிதனை கடித்தால் அவ்வளவு தான் அவரை பிழைக்க வைப்பது கடினம்.ஆனால் இப்போது நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் எத்தகைய பாம்பு கடித்தாலும் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அவர்களை காப்பாற்றி விடலாம். இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேது கூலி தொழிலாளியான இவர் தன் வீட்டில் வெளியே நின்ற கொண்டு இருந்த போது அங்கிருந்த கட்டு விரியன் பாம்பை அடிக்க முயன்றார். அப்போது அந்த பாம்பு சேதுவை கடிதத்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சேர்ந்து அந்த பாம்பை அடித்துக் கொன்று விட்டு , சேதுவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தொண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேதுவுக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உங்களைக் கடித்தது எந்த வகை பாம்பு என தெரியுமா என கேட்டுள்ளார் ? அதற்கு அவர் கொண்டு சென்ற பையில் இருந்த கட்டுவிரியன் பாம்பை எடுத்துக் காட்டியுள்ளார்.பாம்பை பார்த்த மருத்துவர்கள் , செவிலியர்கள் அலறியடித்து ஓட மருத்துவமனையை பரபரப்பானது.அதன்பின் அது இறந்த பாம்பு என்று சொன்ன பிறகே அவர்கள் சமாதானமாகி சிகிச்சை அளித்தனர்.