தீபிகா படுகோனே பிரபாஸோடு இணைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து தீபிகாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இவரும் இந்திய நடிகர் ரன்வீர் சிங்கும் ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2018 திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையில் சில மாதங்களாகவே இருவருடைய உறவில் இடைவெளி அதிகமாக உள்ளது என்றும் விவகாரத்து வரை செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் இருவர் தரப்பிலும் இதை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் தீபிகா படுகோனை விவாகரத்து செய்யப்போவதாக எழுந்த வதந்திகளுக்கு ட்வீட்மூலம் இல்லை என பதில் சொல்லியிருக்கிறார் ரன்வீர் சிங். ரன்வீருக்கும் தீபிகாவுக்கும் டேர்ம்ஸ் சரியில்லை, எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து ஆகலாம் என செய்திகள் வந்தன. தற்போது, கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட தீபிகாவை வாழ்த்தி, ”என் ராணி” என குறிப்பிட்டு வதந்திகளை புறந்தள்ளியிருக்கிறார் ரன்வீர்.