நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக கோட்டபாய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார்
மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிவதற்கு முன்னரே அதனை கலைப்பதால் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மே மாதம் 12ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.