Categories
உலக செய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள்சேர்ப்பு… பாதுகாப்பு துறை மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!

ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள் சேர்ப்பதாக பாதுகாப்பு துறை மந்திரி தகவல் வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்திரவிடப்பட்டிருக்கிறது. தாய்நாட்டிற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் செப்டம்பர் 21 அன்று ராணுவ அணி திரட்ட இயக்கத்தை அறிவித்துள்ளார். இந்த சூழலில் அதிபர் புதின் அறிவிப்புக்கு எதிராக ரஷ்யா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலரஷ்யா தங்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவின் அண்டை நாடுகளான போலந்து, உஸ்பெகிஸ்தான், பின்லாந்து, கஜகஸ்தான் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி ரஷ்ய நாட்டவர்கள் அதிகமானோர் செல்ல தொடங்கி  இருப்பதாக ரஷ்ய அதிபர் மாளிகை கூறியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரி செர்ஜி ஷோய்கு பேசும்போது அதிபர்  செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட ராணுவ  அணிதிரட்டல்  அறிவிப்புக்கு பின் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள்.

மேலும் 80 பயிற்சி மைதானங்கள் மற்றும் ஆறு பயிற்சி மையங்களில் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. முறையான பயிற்சி மற்றும் போர் ஒருங்கிணைப்புக்கு பின் மட்டுமே மக்களை போர் மண்டலங்களுக்கு அனுப்ப முடியும். மேலும் ராணுவ ஆட்சியருக்கு மையங்களுக்கு வரும் தன்னார்வலர்களிடம் ராணுவத்தில் சேராமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்கள் இல்லாவிட்டால் அவர்களை திருப்பி அனுப்ப மாட்டோம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |