Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்தின்போது மருத்துவ உதவி பெற…. சூப்பர் வசதி அறிமுகம்…. வரவேற்கும் மக்கள்…!!!

பொதுவாக சாலை போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இப்படியான அவசர காலத்தில் உடனே விபத்து நடந்த இடத்திலேயே மருத்துவ உதவியை பெற முடிந்தால் உயிரிழப்புகளை பெருமளவு தடுக்க முடியும் அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சாலை போக்குவரத்தின்போது மருத்துவ உதவி பெற கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மருத்துவ உதவி தேவைப்படுவோர் சாலையோர விளக்கு கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து ஆம்புலன்ஸ் மூலம் இருக்கும் இடத்திலேயே மருத்துவ உதவிகளை பெறலாம். அவசர காலங்களில் மக்களுக்கு உதவும் இந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்றுள்ளனர்.

Categories

Tech |