Categories
சினிமா தமிழ் சினிமா

ரன்பீர்-தீபிகா விவாகரத்து செய்யப் போகீறார்களா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர்-தீபிகா. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த ரன்பீரும், தீபிகாவும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து 2 பேரும் படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் சமீப காலமாகவே ரன்வீரும், தீபிகாவும் பிரிய போவதாக இணையதளத்தில் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த தகவல்களுக்கு தற்போது நடிகர் ரன்வீர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது நானும் தீபிகாவும் காதலிக்க தொடங்கி 10 வருடங்கள் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ளார். இதிலிருந்து ரன்வீர் மற்றும் தீபிகா விவாகரத்து செய்யப் போவதாக பரவிய தகவல்கள் தற்போது வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் விவாகரத்து தகவல்கள் வதந்தி என்று தெரிய வந்ததால் ரன்வீர்-தீபிகா ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |