தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 3 படங்களுமே தோல்வி அடைந்த நிலையில், திருசிற்றம்பலம் திரைப்படம் தனுசுக்கு மாபெரும் கம்பேக்காக அமைந்தது. இந்த படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் அடுத்த ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க, சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். மேலும் நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தை ஆஹா ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை தனுஷ் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
#Vaathi – Post theatrical OTT rights with Aha. The film is gearing up for a theatrical release in both Tamil and Telugu on December 2nd. Interestingly, #Dhanush has dubbed for himself in the Telugu version – some more excitement to watch the film!
— Siddarth Srinivas (@sidhuwrites) October 4, 2022