Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதிபுருஷ் டீசர் விவகாரம்…. ஏன் எங்களை மட்டும் குறி வைக்கிறீர்கள்?….. கடுமையாக விமர்சித்த மத்திய பிரதேச மந்திரி…..!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 2‌ ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் ஆதிபுருஷ் டீசரில் சீதை, அனுமன், ராமன், உள்ளிட்டோர் சித்தரிக்க பட்டிருப்பது குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா விமர்சித்துள்ளார். மேலும் பெரும்பான்மை சமூகத்தில் மதத்தை மட்டும் ஏன் திரைப்படங்களில் குறி வைக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து அவர் கூறியது, எங்கள் மத நூல்களில் அனுமனின் உடை குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய மத நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் டீசரில் அதற்கு பதிலாக அவர் தோல் ஆடை அணிந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது. அவரது தோல் சிவப்புக்கு பதிலாக கருமையாக காட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தில் அவர்கள் மாற்றம் செய்துள்ளனர். சீதையின் கதாபாத்திரம் மற்றும் அவருடைய அணியும் விதம் கூட சிதைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் பொருத்தவரை மற்ற மதங்கள் என்று வரும்போது படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதை தவிக்கிறார்கள. இதனையடுத்து பாபா மகாலில் சொமேட்டோ விளம்பரம், சன்னி லியோன் ராதா பாடல், சபயாச்சியின் மங்கள சூத்ரா விளம்பரம், காளி படத்தின் போஸ்டர், ஓ மை காட் திரைப்படம், ஆஷ்ரம் வெப் சீரிஸ் என ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது?ஏன் நாங்கள் மட்டும்தான் குறியாக உள்ளோம்?. மேலும் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் இந்த முறை தவறானது இந்த படைப்பு சுதந்திரத்தை மற்ற மதங்கள் மீதும் எடுத்துக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். ஆதிபுருஷ் படத்தில் இயக்குனர் ஓம்ராவத் துக்கு படத்தில் இருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |