திருமாவளவன் மணி விழாவையொட்டி நடந்த குறும்பட நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியிருந்ததாவது “மக்களுக்காக தான் கலை, மக்களே பிரதிபலிப்பது தான் கலை. இதை சரியாக இன்று நாம் கையாளவேண்டும். இல்லையெனில் கூடியவிரைவில் நம்மிடம் இருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். இதனிடையில் திருவள்ளுவருக்கு காவிஉடை அணிவிப்பதாகட்டும், இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என தன் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இவ்வாறு வெற்றிமாறனின் கருத்து விவாத பொருளாக உருவெடுத்தது.
இதனால் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அந்த அடிப்படையில் வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து திருமாவளவன் கூறியிருப்பதாவது “இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு, வைணவம் வேறு. அதேபோல் திருநீறு பட்டே வேறு, திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக் கொண்டது. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டது.
இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை.. (1/2) pic.twitter.com/cWQkPBdqq2
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 4, 2022
இதற்கிடையில் மாறி மாறி மதமாற்றம் செய்து கொண்டனர். அந்த காலத்தில் எல்லாம் இந்துஏது?.. இந்த காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை என்று உரத்து கூறுகின்றனர். அத்துடன் போராட்டம் செய்கின்றனர். இந்த நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முன் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர் மீது இன்றைய அடையாளத்தை திணிப்பது சரியா?.. இவை வரலாற்றுத் திரிபாகாதா? இதைத்தானே இயக்குனர் வெற்றிமாறன் குறிப்பிட்டார். அவர் பெரியாரின்பேரன்” என்று கூறியுள்ளார்.