கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 108 விநாயகர்களும் ஒரே கருவறையில் அமைந்துள்ள 108 கணபதி கோவில் இருக்கிறது. இந்நிலையில் நடுநாயகமாக ஒரு விநாயகர் பெரிய உருவத்தில் வலது காலை தொடங்க விட்டு, இடது காலை மடித்து வைத்து அமர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பின்புறம் சிறிய வடிவத்தில் 108 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 பிள்ளையாா் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோவிலில் இருக்கும் 108 விநாயகர்களும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்காக சாலைகள் போடப்பட்ட போது சாலை அமைக்கும் ஒப்பந்ததாரரின் கனவில் தோன்றிய விநாயகர், இங்கு தனக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து விநாயகர் கனவில் காட்டியது போன்ற அமைப்பிலேயே அந்த ஒப்பந்ததாரர் ஆலயத்தை அமைத்து கொடுத்துள்ளார்.