Categories
மாநில செய்திகள்

மருந்து தட்டுப்பாடு இருக்கு…. ஆனா இல்லை…. கன்பியூஸ் ஆன அமைச்சர்கள்…. குழப்பத்தில் பொதுமக்கள்….!!!!!

வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்புகடிக்கு மருந்து எடுத்துவர கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்ததால் இங்கு வந்த எக்ஸ்ரேகருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையமானது சரியாக செயல்படவில்லை என்று சொல்லி 2 மருத்துவர்களை பணியிடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்பாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “பொன்னை அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மருத்துவர்கள் சரியாக இல்லாததால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இங்கு பாம்பு கடிக்கு மருந்துகள் இல்லை. இதன் காரணமாக நோயாளிகள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 50 கிமீ தூரம் செல்கின்றனர். மேலும் கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனால் இதை அகற்றிவிட்டு புதுகட்டிடம் கட்டிதர சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதன்பின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது “பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லாலாப்பேட்டை சுகாதார நிலையம் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டோம். இவற்றில் பொன்னையில் மருந்துகளை வாங்கிவந்து வைக்காமல் இருக்கின்றனர்.

இதனிடையில் மருந்தாளுநர் பணியும் காலியாக இருக்கிறது. மருத்துவர்கள் உள்ளூரில் உள்ளதால் சரியாக செயல்படுவதில்லை என்று தெரிகிறது. ஆகவே இவர்களை பணியிடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், பெரம்பலூர், தென்காசி போன்ற 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க தொடர் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை. 38 மாவட்டங்களிலும் அரசுமருந்து கிடங்குகள் இருக்கிறது. எனவே அனைத்து மருந்து கிடங்குகளையும் செய்தியாளர்கள் ஆய்வு மேற்கொள்ளலாம்” என்று அவர் கூறினார். இதற்கிடையில் மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூற, அதே இடத்தில் மருந்து தட்டுப்பாடு எதுவுமில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இதன் காரணமாக அங்கு குழப்பமான சூழல் நிலவியது.

Categories

Tech |