Categories
உலக செய்திகள்

“ட்விட்டர் பங்குகளை வாங்க முன் வந்த எலான் மஸ்க்”… வெளியான தகவல்..!!!!

ட்வீட்டர் பங்குகளை எலான் மஸ்க் வாங்க முன் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 3.34 லட்சம் கோடிக்கு வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை இந்த நிலையில் ட்விட்டரில் போலி கணக்குகள் இருக்கிறது என்று ஆதாரத்தை நிரூபிக்காத காரணத்தால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி எலான் மஸ்க் ஒரு பங்கிற்கு 54.20 டாலருக்கு ஒப்பந்தத்தை தொடர முன்வந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே எலான் மஸ்கின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ட்விட்டர் நிர்வாகத்தின் வர்த்தகம் இடை நிறுத்துவதற்கு முன்பு பங்குகள் 13 சதவீதம் அதிகரித்து 47.95 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |