Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட டிரைவிங் லைசென்ஸ் இருக்கா…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

பல்வேறு மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார்கார்டுடன் நம் முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகரித்துவரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக போலி டிரைவிங் லைசென்ஸ் வாயிலாக நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என கருதப்படுகிறது. இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கிய ஆவணம் ஆகும். இதன் வசாயிலாக அரசின் பல்வேறு திட்டங்களை எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். சென்ற 2 வருடங்களாக கொரோனா என்பதால் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது உள்ளிட்ட பல அத்தியாவசியமான செயல்முறைகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இப்போது கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து தளர்வுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டதை அடுத்து மீண்டும் டிரைவிங் லைசென்ஸ் பணிகள் துவங்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக தற்போது மக்கள் அவர்களின் டிரைவிங் லைசென்ஸ்உடன் ஆதாரை இணைத்துக் கொள்ளலாம். அவ்வாறு டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கு நீங்கள் வெளியில் எங்கும் அலையவேண்டிய தேவையில்லை. ஏனெனில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைத்து கொள்ளலாம். இதை செய்ய முதலில் உங்களது மாநில போக்குவரத்துத்துறையின் இணையதளத்திற்கு போக வேண்டும்.

இப்பக்கத்திற்கு சென்றவுடன் “லிங்க் ஆதார்” எனும் ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும். அதன்பின் திரையில் கீழே தோன்றும் பகுதியில் “டிரைவிங் லைசென்ஸ்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக டிரைவிங் லைசென்ஸ் எண்ணை உள்ளிடவும். பின் கெட் டீட்டெயில்ஸ் என்பதை க்ளிக் செய்த பிறகு ஆதார்எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். அதனை தொடர்ந்து சப்மிட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பின் உங்களது மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாக OTP அனுப்பி வைக்கப்படும். மொபைலுக்கு வந்த ஓடிபி-யை நீங்கள் உள்ளிட்டதும் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆதார்அட்டை இணைக்கும் செயல்முறை நிறைவடைந்துவிடும்.

Categories

Tech |