உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. வியூ ஒன்ஸ் (View Once) என்னும் ஆப்ஷன் மூலம் அனுப்பப்படும் போட்டோக்களை பயனர்களால் இதுவரை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. இதன்படி, இனி வியூ ஒன்ஸ் மூலம் அனுப்பப்படும் போட்டோ அல்லது வீடியோக்களை ஸ்க்ரீன்ஷாட்/ ஸ்க்ரீன்ரெக்கார்ட் செய்யமுடியாது.