Categories
பல்சுவை

அடேங்கப்பா! இது வேற லெவல்…. பெண்ணுடன் சேர்ந்து பாங்க்ரா நடனமாடும் எருமை மாடு….. வைரலாகும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து இணையதள சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்கும் விதமான பல்வேறு பொழுதுபோக்கு வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு எருமை மாடு பாங்க்ரா நடனம் ஆடும் வீடியோவும் வைரல் ஆகிறது. இதுவரை நாம் பல விதமான பறவைகள் மற்றும் விலங்குகள் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம்.

ஆனால் எப்போதுமே சோம்பேறிகளாக இருக்கக்கூடிய எருமை மாடு நடனம் ஆடுவது தற்போது வித்தியாசமான முறையில் இருப்பதோடு, மக்களை ரசிக்க வைக்கவும் செய்கிறது. அதாவது ஒரு பெண்மணி முதலில் பாங்கரா நடனம் ஆடுகிறார். அந்த நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு எருமை மாடு திடீரென துள்ளி குதித்து நடனமாட ஆரம்பித்துவிட்டது. இவர்களுடன் இணைந்து சில சிறுவர்களும் நடனம் ஆடுகின்றனர். மேலும் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by VIDEO NATION (@videonation.teb)

Categories

Tech |