Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்க…? இதோ இனிப்பான செய்தி…. என்னனு தெரிஞ்சுக்கோங்க…!!!!

ரிசர்வ் வங்கியானது கடந்த செப்டம்பர் 30 முதல் வட்டி வீதத்தை உயர்த்த நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியது. அந்த வகையில் தற்போது இந்தியன் வங்கியும் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது.

இந்த புதிய வட்டி விகிதமானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வட்டி வீதமானது 0.05% முதல் 0.50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்களுக்கு 610 நாட்களுக்கு 6.25 சதவீதம் வட்டி என்ற ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டத்தையும் வழங்குகிறது.

புதிய வட்டி விகிதங்கள் (உயர்த்தப்பட்டவை மட்டும்)

121 – 189 நாட்கள் : 3.85%

181 நாட்கள் – 9 மாதம் : 4.5%

9 மாதம் – 1 ஆண்டு : 4.75%

1 ஆண்டு : 5.5%

2 ஆண்டு : 5.6%

மாற்றப்படாதவை:

7 – 14 நாட்கள் : 2.8%

15 – 29 நாட்கள் : 2.8%

30 – 45 நாட்கள் : 3%

46 – 90 நாட்கள் : 3.25%

91 – 120 நாட்கள் : 3.50%

1 – 2 ஆண்டு : 5.5%

3 – 5 ஆண்டு : 5.75%

5 ஆண்டு : 5.65%

Categories

Tech |