Categories
தேசிய செய்திகள்

ஆப்பிள் ஐபோன் புது மாடல்!…. விலை என்னென்னு தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆப்பிள் புது ஐபோன் 14 சீரிஸை ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த போன் மார்க்கெட்டில் அமோக விற்பனையில் உள்ள நிலையில், அடுத்து அந்நிறுவனம் களமிறக்கும் ஐபோன் பற்றியும், அதன் விலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனமானது 4th gen ஐபோன் SE-ஐ உருவாக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையிலும் ஐபோன் SE மாடல்களின் iPhone SE, iPhone SE 2 மற்றும் iPhone SE 3 சீரீஸ்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது iPhone SE 4 விரைவில் வெளியாகவுள்ளது. லேட்டஸ்டாக  வெளியாகி இருக்கும் தகவலின் அடிப்படையில், பல மாற்றங்களுடன் iPhone SE 4 மொபைல் வெளியாகும் என்றாலும், ஏமாற்றமளிக்கும் ஒரு விஷயமும் உள்ளது.

அதாவது இதற்கு முன் இதே சீரிஸில் வெளியாகிய ஐபோன்களைக் காட்டிலும் விலை அதிகமாக இருக்குமாம். இந்த வருடம் ஐபோன் மினிமாடலை ஆப்பிள் நிறுத்தும். அதன்பின் அடுத்த தலைமுறை ஐபோன் SE (அல்லது) ஐபோன் SE 4 இந்த இடத்துக்கு பூர்த்திசெய்யும் அடிப்படையில் வெளியிடப்படும். இதுஒரு சிறிய தொலைபேசியாக இருக்கும் என கூறப்படுகிறது. வடிவமைப்பு பொறுத்தவரையில் ஒரு பெரிய மாற்றம் இருக்கும். ஐபோன் எஸ் இ 4, ஐபோன் எக்ஸ்ஆரின் வடிவமைப்பில் வெளியாக வாய்ப்புகள் அதிகம். 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடன் ஹோம் பட்டன் இன்றி இருக்கும் எனவும் பிரபல யூடியூபர் ஜான் பிரோஸ்ஸர் தெரிவித்து இருக்கிறார்.

புது ஐபோன் ஒரு நாட்ச் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். எனினும் சில காரணங்களால் அதில் பேஸ் ஐடி இருக்காது. ஆப்பிளின் பாதுகாப்பான 3-டிபேஸ் அன்லாக் அம்சத்துக்குப் பதில் ஐபோன் எஸ் இ 4, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இடம்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஐபோன்-SE4, அதன் முந்தைய ஐபோன் SE3-உடன் ஒப்பிடும்போது விலையுயர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவில் இதன் விலையானது CNY 4,000 (சுமார் ரூ. 45 ஆயிரம்) மற்றும் CNY 5,000 (ரூ. 57,032) வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் SE 2022 CNY 3,499 (ரூபாய்.39,922) விலையில் விற்பனையாகிறது. ஐபோன் எஸ்இ 2022 இந்தியாவில் சுமார் 45 ஆயிரத்துக்கு விற்கப்படும் சூழ்நிலையில், புது ஐபோன் இந்தியாவில் விலை இதனைவிட சற்று அதிகமாக இருக்கலாம். எப்போது அறிமுகம் எனும் விபரம் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |