லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
90 காலகட்டத்தில் வெளியான மர்ம தேசம், ஜீம் பூம் பா போன்ற தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கண்ணுபடப் போகுதய்யா’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 6அத்தியாயம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.