பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சேருவார்களா பாரதி tna டெஸ்ட் எடுப்பாரா என்று தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது ஆனால் கதையில் அதைப் பற்றி காட்டாமல் தொடர்ந்து வேறு விதமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பல கதைகள் மாறினாலும் வில்லி வெண்பா கதாபாத்திரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை. மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டா பக்கத்தில் அவரை பாலோ செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் பரீனா அடிக்கடி ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிப்பார் அந்த வகையில் ரசிகர் ஒருவர் அவரின் முதல் செல்பி புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் பரீனா. மிக இளமையாக அந்த புகைப்படத்தில் இருக்கின்றார் ஒரு தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை சின்ன திரையில் தொடங்கிய போது பரீனா அந்த போட்டோவை எடுத்திருக்கின்றார். இந்த நிலையில் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்களையும் கமெண்ட்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.