இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலமாக சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளர்ப்பு செலவை குறைக்க விவசாயிகள்,மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக subsidy on fish farmingஎன்ற திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றது.இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களை கூறியுள்ளது.
விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகள் குறைந்த செலவில் பல்வேறு வகையான மீன்களை வளர்த்து மீன்களின் தரம் மற்றும் மகசூலை அதிகரிக்க முடியும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன் மீன் வளர்ப்பவர்களின் வருமானமும் அதிகரிக்க கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.