Categories
அரசியல் மாநில செய்திகள்

”இம்ரான்கானின் கைக்கூலி ஸ்டாலின்” வெளுத்து வாங்கிய பாஜக ….!!

பாகிஸ்தான் பிரதமரின் கைப்பாவையாக முக.ஸ்டாலின் செயற்படுகின்றார் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர்  பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இதையடுத்து பேசிய முரளிதர ராவ், பொய் கூறி இனி ஸ்டாலினால் தமிழகத்தில் எதுவும் செய்ய இயலாது. CAA சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் ஒரு வரி இருப்பதை ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி வனவாசம் செல்கின்றேன் என்று சவால் விட்ட முரளிதர ராவ் , பாகிஸ்தானில் ஆபத்தில் உள்ள இந்துக்கள் இந்தியா வந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மகாத்மா காந்தி தெரிவித்ததாக சுட்டி காட்டியதோடு,

திமுக தலைவர் ஸ்டாலின் பாகிஸ்தானில் இருக்கும் இம்ரான்கானுக்கு கைப்பாவையாக செயற்படுகின்றார் என்று குற்றம் சாட்டியதோடு ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |