மறைந்த மகாராணி 2-ம் எலிசபெத் இயற்கை உலகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என வேல்ஸின் புதிய இளவரசர் வில்லியம் அவரது பாட்டி குறித்து தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அவரது மூத்த மகன் வில்லியம் வேல்ஸ் புதிய இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். இந்நிலையில் வேல்ஸின் புதிய இளவரசராக வில்லியம் யுனைடெட் வனவிலங்கு உலகளாவிய உச்சி மாநாட்டில் தோன்றி தனது முதல் உரையை ஆற்றினார்.
Prince William delivers the keynote speech highlighting the serious and organised nature of illegal wildlife crime and its damaging impact on global biodiversity and local communities https://t.co/EWHc8kiBZX
— Sky News (@SkyNews) October 4, 2022
அந்த உரையாடலின் போது அவரது மறைந்த பாட்டி மற்றும் பிரித்தானியாவை 70 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மகாராணி 2-ம் எலிசபெத்தை பற்றி வேல்ஸ் இளவரசர் வில்லியம் கூறியதாவது, “மகாராணி இயற்கை உலகத்தின் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்றும் நாம் செய்யும் செயல்கள் மூலம் நாம் தவறவிட்டவர்களை கெளரவிப்பது ஒரு ஆறுதல். மேலும் சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் செய்து வரும் முன்னேற்றத்திலிருந்து நான் மிகவும் ஆறுதல் அடைகின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.