கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றதது. இதில் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி, பா.மாக_வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சிவகுமார் , மீசை அர்ஜூனன் உள்ளிட்டோர் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் , முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.
இதையடுத்து பேசிய முரளிதர ராவ், பொய் கூறி இனி ஸ்டாலினால் தமிழகத்தில் எதுவும் செய்ய இயலாது. CAA சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏதேனும் ஒரு வரி இருப்பதை ஸ்டாலின் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகி வனவாசம் செல்கின்றேன் என்று சவால் விட்ட முரளிதர ராவ் , மத்தியில் திமுகவின் கூட்டணி ஆட்சி செய்த போது மாநிலத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில் தான் இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இதற்கு ஸ்டாலினால் பதில் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.