அக்ஷய்குமார் நடித்து இருக்கும் ஹிந்தி திரைப்படம் . அவருடன் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், நஷ்ரத், சத்யதேவ், நாசர் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை அபிஷேக் சர்மா இயக்கி இருக்கிறார். தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்குள் மூழ்கியிருக்கிறது ராமர் பாலம். ராமாயணத்தில் ராமருக்காக தன் வானர படைகளை கொண்டு இந்த பாலத்தை அனுமன் அமைத்ததாக கூறப்படுகிறது. இதை இந்துக்கள் நம்புகின்றனர், புனிதமாக கருதுகிறார்கள்.
எனினும் இதை வேறுசிலர் அது கடலுக்குள் இருக்கும் ஒரு மணல்திட்டு தொடர் என்று கூறுகின்றனர். இந்த விஷயம்தான் ராம் சேது திரைப்படத்தின் கதை ஆகும். ராமர் பாலத்தை வெறும் மணல்திட்டு என தீர்மானித்து அதனை உடைத்து கப்பல் போக்குவரத்துக்கு திட்டமிடுகின்றனர். தொல்பொருள் துறை ஆய்வாளரான அக்ஷய் குமார் அது மணல்திட்டு அல்ல ராமர் பாலம்தான் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து ராமர் பாலத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் இதன் கதை ஆகும். வரும் தீபாவளி அன்று அந்த படம் வெளிவருகிறது. அத்துடன் தமிழ் மொழியிலும் வெளியாகிறது. இப்போது இதன் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.