மகரம் ராசி அன்பர்களே, இன்று புதியவர்களின் அறிமுகம் அதனால் ஆதாயமும் ஏற்படும். கோவில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும். திருப்திக்கு மேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத் துணை வழியே எதிர்பார்த்த காரிய அனுகூலம் இருக்கும். உடல் நிலையில் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
இன்று மற்றவர்களில் பாராட்டுதலுக்கு முற்படுவீர்கள். இன்று ஆதாயத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. அதேபோல வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சிறப்பான தகவல்கள் இன்று வந்து சேரும்.இன்று சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். கூட மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மனம் மகிழ்வீர்கள். இன்று திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும்.
உடலில் வசீகரத் தன்மை கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்