Categories
சினிமா

ராம் படப்பிடிப்பின்போது…. சமையல் செய்து அசத்திய மோகன்லால்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

த்ரிஷ்யம் 2 பாகங்கள் மற்றும் டுவல்த் மென் போன்ற திரைப்படங்களின் வெற்றியை அடுத்து மோகன்லால் தற்போது 4வது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முதல் அலைக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட இப்படம் வெளிநாடுகளில் படப் பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததால், சென்ற 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இப்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு மீண்டுமாக துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் படப் பிடிப்பு ஓய்வுநேரத்தில் தாங்கள் தங்கியிருந்த இடத்தில் சக நடிகர்களான பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் மற்றும் நடிகை சம்யுக்தா மேனன் போன்றோருக்கு மோகன் லால் மாட்டு இறைச்சி கறி சமைத்துக் கொடுக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |