Categories
ஆன்மிகம்

மகா ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!!!

திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 8 ஆம் நாளான நேற்று அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையில் உபய தேவர்களுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மலையப்ப சுவாமி தன்னுடைய இரு தாயார்களுடன் கூடிய கம்பீரமான தோற்றத்தில் தேரில் அமர்ந்திருந்து மாட வீதிகளில் உலா வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை கோஷமிட்டு சொல்லி தேரை இழுத்தனர்.

மேலும் திருப்பதியில் நடக்கும் ரதோத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். மாட வீதிகளில் தேரை இழுக்கும் போது எந்தவித விபத்துகளும் ஏற்படாமல் இருப்பதற்கு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். இதனை அடுத்து தேரை வடம் பிடித்து இழுத்து வரும்போது கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் ராத உற்சவத்தில் பங்கேற்றால் மறு ஜென்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணியிலிருந்து குதிரை வாகன வீதி உலாவும் நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |