Categories
சினிமா

எதிர்த்தரப்பு நபர்களை சீண்டுவது போல டைட்டில்…. சங்கடத்தில் இருக்கும் நடிகர்…. நெட்டிசன்கள் கருத்து….!!!!

சென்ற சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகிய சட்டம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இளம் நடிகர் ஸ்ரீநாத்பாஷி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல யு-டியூப் சேனலில் பேட்டிக்காக சென்றபோது, நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளினி அவரை எரிச்சலூட்டும் வகையில் கேள்விகளை கேட்டார் என்றும் இதனால் பேட்டியை பாதியிலேயே நிறுத்தி அந்த தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளில் ஸ்ரீநாத்பாஷி பேசினார். இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நேரத்தில் அவர் படங்களில் நடிப்பதற்கு தற்காலிகமாக தடைவிதிக்கும் அளவுக்கு விஷயம் சீரியஸ் ஆனது. இதனால் அந்த பெண் தொகுப்பாளினி நடிகர் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்று அவர் மீதான தடையை விளக்குவதற்கும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். அதன்பின் சம்பந்தப்பட்ட நடிகரும் அப்பெண் தொகுப்பாளனியிடம் மன அழுத்தத்தில் இருந்ததால், இப்படி பேசி விட்டேன் என மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு அவர் ஒரு சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, புகைப்படம் இல்லாமலேயே சட்டம்பி படத்தின் போஸ்டர்கள் வெளியாகியது. இது ஒரு பக்கம் இருக்க, இப்போது ஸ்ரீநாத்பாஷி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் ஒன்று வெளியாகி மீண்டும் அவருக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நமக்கு கோடதியில் காணாம் (நாம கோர்ட்ல பாத்துக்கலாம்) என வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் வார்த்தைகள், சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பு நபர்களை மீண்டும் சீண்டுவதுபோல அமைந்துள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது இப்போது நடிகர் ஸ்ரீநாத்பாஷிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |