தமிழகத்தில் நாளை முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு வரும் 9 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இன்றுடன் தசரா விடுமுறை நிறைவு பெற்று நாளை பள்ளி திறக்கும் என கூறியுள்ளார்.